சினிமா
அனிதா

அனிதா... தயவு செஞ்சு அழாத அருவருப்பா இருக்கு - பிரபல நடிகை டுவிட்

Published On 2020-12-08 09:18 IST   |   Update On 2020-12-08 09:18:00 IST
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் பிரபல நடிகை, அனிதா அழுதது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 60 நாட்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி ஆகியோர் வெளியேறி உள்ளனர். கடந்த வாரம் சனம் வெளியேறியது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் அவருடன் நெருங்கி பழகி வந்த அனிதா, சனம் வெளியேறிய போது கண்ணீர்விட்டு கதறி அழுதார். அனிதா அழுததை பார்த்து எரிச்சலடைந்த நெட்டிசன்கள், அவர் நடிப்பதாகவும், அடுத்த வாரம் வெளியேறிவிடுவோமோ என்ற பயத்தில் இவ்வாறு செய்வதாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.



இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் நடிகை ஸ்ரீ பிரியா, அனிதா அழுதது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘அய்யோ.... தயவு செஞ்சு அழாத... அருவருப்பா இருக்கு’ என பதிவிட்டுள்ளார். ஸ்ரீபிரியாவின் இந்த கருத்தை ஆதரித்தும், எதிர்த்தும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar News