சினிமா
மாயாண்டி குடும்பத்தார் படக்குழு

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?

Published On 2020-11-26 14:01 IST   |   Update On 2020-11-26 14:01:00 IST
மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாகவும், அதில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராசு மதுரவன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி உள்பட 10 இயக்குனர்கள் நடித்திருந்தனர். 



இந்நிலையில், ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தை ‘ஒரு கல்லூரியின் கதை’ படத்தை இயக்கி பிரபலமான நந்தா பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News