‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வந்த சூர்யா, ஒரே வாரத்தில் நடித்து முடித்துவிட்டாராம்.
ஒரே வாரத்தில் கவுதம் மேனன் படத்தில் நடித்து முடித்த சூர்யா
பதிவு: நவம்பர் 24, 2020 14:09
சூர்யா, கவுதம் மேனன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், ஹலீதா ஷமீம், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர்.
கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர். இதில் கவுதம் மேனன் இயக்கும் குறும்படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். கடந்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு ஒரே வாரத்தில் நடத்தி முடித்துள்ளனர். இந்த குறும்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Related Tags :