பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை ஒருவர், தயாரிப்பாளர் மீது புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவறாக நடக்க முயன்றார் - தயாரிப்பாளர் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்
பதிவு: நவம்பர் 24, 2020 13:22
மந்தனா கரிமி ராய்
பிரபல இந்தி நடிகை மந்தனா கரிமி ராய். இவர் ஆரம்பத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பின்னர் கதாநாயகி ஆனார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். மந்தனா கரிமி ராய் தற்போது கோகோ கோலா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் சன்னிலியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர தாரிலால் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மந்தனா கரிமி ராய் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே தயாரிப்பாளர் எனக்கு தொல்லை கொடுத்தார். படப்பிடிப்பின் கடைசி நாளில் எனது காட்சிகளில் நடித்து முடித்து விட்டு கிளம்ப தயாரானேன். அப்போது நான் இருந்த வேனுக்குள் வந்து கிளம்ப விடாமல் தடுத்தார். உனக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன். எனவே இங்கேயே இருக்க வேண்டும் என்று சொல்லி தவறாக நடக்க முயன்றார்” என்றார்.
இந்த புகாரை மறுத்து தாரிலால் கூறும்போது, “கூடுதல் நேரம் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அதிகமாக ரூ.2 லட்சம் கேட்டார். அதை கொடுத்து விட்டேன். வேறு எதுவும் நடக்கவில்லை” என்றார்.
Related Tags :