சூர்யா 40 படம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என இயக்குனர் பாண்டிராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வதந்திகளை நம்பவேண்டாம் - ‘சூர்யா 40’ படம் குறித்து பாண்டிராஜ் டுவிட்
பதிவு: நவம்பர் 24, 2020 11:40
சூர்யா, பாண்டிராஜ்
இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக சூர்யாவின் 40-வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதனிடையே இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தன.
இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் பாண்டிராஜ், “சூர்யா 40 படம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என பாண்டிராஜ் கூறியுள்ளார்.
ஏற்கனவே இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :