தமிழில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ள ராஷ்மிகா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பர்ஸ்ட் தம்பி.... நெக்ஸ்ட் அண்ணன் - ராஷ்மிகாவுக்கு அடித்தது ஜாக்பாட்
பதிவு: நவம்பர் 22, 2020 18:36
ராஷ்மிகா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் அவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா 40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :