தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக இருப்பவர், எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன்தான் என்று சமூக வலைத்தள பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன்தான்... புகழும் வில்லன் நடிகர்
பதிவு: நவம்பர் 17, 2020 21:30
ரஜினி
பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ் ரஜினியுடன் முதன் முதலாக ராஜாதி ராஜா படத்தில் நடித்தார். ரஜினியின் பிரபலமான எங்கிட்ட மோதாதே பாடல், ஆனந்தராஜை கேலி செய்து தான் இடம்பெற்றிருக்கும். பின்னர் பாட்ஷா படத்தில் ரகுவரனுக்கு அடுத்த இரண்டாவது வில்லனாக நடித்து புகழ் பெற்றார். மின் கம்பத்தில் ரஜினியை கட்டி வைத்து ஆனந்தராஜ் அடிக்கும் காட்சி ரசிகர்களையும் தாய்மார்களையும் கண்கலங்க வைத்தது.
ஆனந்தராஜ் கொடூரமான வில்லனாக இருப்பார். பின்னர் ரஜினியும் அவரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து ரசிகர்களை குஷிப்படுத்துவார். ஆனந்தராஜுக்கு சிறந்த வில்லன் நடிகர் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது பாட்ஷா திரைப்படம்.
இந்நிலையில், தற்போது ஆனந்தராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நான் நிறைய படம் செய்தேன். ஆனால், நான் உங்களுடன் பணிபுரிந்த அந்த திரைப்படம் எனக்கு சிறந்த வில்லன் என்று பெயரிடப்பட்டது. எப்போதும் என் ஹீரோ ரஜினிகாந்த் அண்ணன்,” என்று கூறி ரஜினியை டேக் செய்துள்ளார்.
Related Tags :