சினிமா
நெடுமுடி வேணு மகன் திருமணம்

எளிமையாக நடைபெற்ற நெடுமுடி வேணு மகன் திருமணம்

Published On 2020-11-15 13:41 IST   |   Update On 2020-11-15 13:41:00 IST
திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் நெடுமுடி வேணுவின் மகன் திருமணம் எளிமையாக நடைபெற்றது.
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் நெடுமுடி வேணு. தமிழில் கமல் நடித்த இந்தியன் படத்தில், சிபிஐ அதிகாரியாக நடித்த இவர், அந்நியன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

 தற்போது நெடுமுடி வேணுவின் மகன் கண்ணனுக்கும் திருவனந்தபுரம் செம்பழந்தியை சேர்ந்த விரிந்தா நாயர் என்பவருக்கும் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் என மிக குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் அருகிலுள்ள துர்கா தேவி கோவிலில், அரசு அறிவித்துள்ள கோவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

Similar News