சினிமா
பிரபு தேவா

ரகசிய திருமணம் செய்து கொண்டாரா பிரபு தேவா?

Published On 2020-11-14 13:04 IST   |   Update On 2020-11-14 13:04:00 IST
நடன இயக்குனர், நடிகர், இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சினிமா நடன இயக்குனராக இருந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்த பிரபுதேவா தமிழில் விஜய், ஜெயம் ரவி, விஷால், இந்தியில் சல்மான்கான், அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் போன்றோர் நடித்த படங்களை இயக்கி டைரக்டராகவும் முத்திரை பதித்தார். பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்து தோல்வியில் முடிந்தது. 

நயன்தாராவை மணக்க முதல் மனைவியையே விவாகரத்து செய்த நிலையிலும் திருமணம் நடக்கவில்லை. காதல் முறிவுக்கான காரணத்தையும் இருவரும் வெளிப்படுத்தவில்லை. தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார். 

பிரபுதேவாவுக்கு தற்போது 47 வயது ஆகிறது. குடும்பத்தினர் பிரபுதேவாவிடம் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் உறவுக்கார பெண்ணுடன் பிரபுதேவாவுக்கு தற்போது காதல் மலர்ந்துள்ளதாகவும், அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பிரபுதேவா தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Similar News