தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
புதிய அவதாரம் எடுத்த ஜெய்... உதவும் வெங்கட் பிரபு
பதிவு: நவம்பர் 13, 2020 20:31
ஜெய்
இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளியான நாளை டீசரும், பொங்கல் தினத்தில் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்துக்கு முன்னதாக, ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார் சுசீந்திரன். ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஜெய்யே இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். மேலும் இதன் டைட்டில் லுக் போஸ்டரை தீபாவளியை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறார். இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார்.
Related Tags :