சினிமா
சிம்பு

பிரம்ம முகூர்த்தத்தில் டீசரை வெளியிடும் சிம்பு

Published On 2020-11-13 18:44 IST   |   Update On 2020-11-13 18:44:00 IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிம்பு, பிரம்ம முகூர்த்தத்தில் தன்னுடைய படத்தின் டீசரை வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ள இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே மாதத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளதாக கூறியிருந்தனர். சிம்புவை வைத்துக்கொண்டு இதெல்லாம் நடக்குற காரியமா என பலரும் கிண்டலடித்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரே மாதத்தில் படத்தை முடித்து கொடுத்து விட்டார் சிம்பு. 



மேலும் இப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீபாவளியான நாளை அதிகாலை 4.32 மணிக்கு வெளியிட இருப்பதாக சிம்பு அறிவித்திருக்கிறார். அதிகாலை 4.32 மணி பிரம்ம முகூர்த்தம் என்பதால் அந்த நேரத்தை சிம்பு தேர்வு செய்திருக்கிறார்.

Similar News