பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
முதன்முறையாக லாரன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ்
பதிவு: அக்டோபர் 28, 2020 14:40
ராகவா லாரன்ஸ், ஜிவி பிரகாஷ்
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி, நடித்த காஞ்சனா படத்தின் 3 பாகங்களும் நல்ல வசூல் பார்த்தன. இவர் தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
இதனிடையே இவர் நடிக்கும் அடுத்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் முதன்முறையாக லாரன்ஸ் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்களை நாளை வெளியிட உள்ளனர்.
Related Tags :