சினிமா
எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்

பிக்பாஸ் அறிமுகம் செய்த ‘எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்’ என்றால் என்ன?

Published On 2020-10-13 06:14 GMT   |   Update On 2020-10-13 06:14 GMT
பிக்பாஸ் அறிமுகம் செய்த ‘எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்’ என்றால் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை ஒரு வாரம் முடிந்துள்ளது. முதல் வாரம் என்பதால் யாரும் வெளியேற்றப்பட வில்லை. இரண்டாம் வாரம் முதல் வெளியேற்றும் படலம் தொடங்குகிறது.

அதற்காக எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களின் சுரேஷ் கேப்டன் என்பதால் அவரை தவிர்த்து சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரியல்லா, ஆஜித் உள்ளிட்ட ஏழு பேர் உள்ளனர். வழக்கமாக மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். 



ஆனால் இந்த முறை பிக்பாஸ் அதில் ஒரு புதிய டுவிஸ்ட் கொடுத்துள்ளார்.  ‘எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்’ என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அதாவது மக்களின் வாக்கை மாற்றி அமைக்கும் சக்தி தான் இந்த ‘எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்’. இது இந்த சீசன் முழுவதும் செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரியல்லா, ஆஜித் ஆகியோரில் ‘எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்’ பெறப்போவது யார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Tags:    

Similar News