சினிமா
வித்யா பிரதீப்

பவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்

Published On 2020-10-02 14:34 IST   |   Update On 2020-10-02 14:34:00 IST
மாரி 2, தடம் படங்களில் நடித்து பிரபலமான வித்யா பிரதீப், தற்போது பவுடர் பூசி ரசிகர்களை பயமுறுத்த இருக்கிறார்.
சாருஹாசன் நடித்த 'தாதா 87' வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி,  தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் விக்ரம் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர், ஆராத்யா, சாந்தினி,  சான்ட்ரியா, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி. வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி, ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக நாயகியர்களும் நடிக்கிறார்கள். த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது.

ஆனால் பெரும்பாலான மக்கள் பவுடர் பூசிய போலியான முகத்தோற்றத்துடன் தங்கள் அடையாளத்தை மறைத்து காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படி வாழும் 18 விதமான காதாபத்திரங்களை பற்றிய படம்தான் பவுடர்.



படத்தில் வரும் கதாபத்திரங்களை நம் வாழ்க்கையில் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்திருப்போம் அல்லது கடந்து வந்திருப்போம். பவுடர் முகத்திற்கு மட்டும் அல்ல உடலுக்கும் கேடுதான். ஆம், போதைப்பொருள் வடிவத்தில்‌ என்பது நிதர்சனமான உண்மை.

ராஜா பாண்டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். கொரோனா நிலைமைகள் சீரானதும் பவுடர் பொங்கல் வைக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

Similar News