சினிமா
சாய் தீனா

இரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா

Published On 2020-10-02 13:53 IST   |   Update On 2020-10-02 13:53:00 IST
பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து அசத்திய சாய் தீனா, தற்போது இரண்டு வேடங்களில் அலற வைக்க வருகிறார்.
தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்களில் அசத்தி வருபவர் சாய் தீனா. தற்போது இவர் மாறுபட்ட இரட்டை வேடங்களில் ‘அலறல்’ என்னும் படம் மூலம் அசத்த வருகிறார். ஜிடி புரொடக்‌ஷன்ஸ், ஜீவேதா பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து அலறல் படத்தை தயாரித்துள்ளார்கள்.

இதில், கிரி கதாநாயகனாகவும் நந்தினி, ஸாகித்யா கதாநாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரங்களாக பேபி - தன்யஸ்ரீ மாஸ்டர் கே. சுடர் நிலவன்  ஆகியோரும் நடித்துள்ளனர். 



ம.ரூபநாதன் மற்றும் அ.பாரூக் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். 

Similar News