சினிமா
இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய இளையராஜா

Published On 2020-09-26 13:55 GMT   |   Update On 2020-09-26 13:55 GMT
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தியடைய இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டிருக்கிறார்.
இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு. இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இளையராஜா நடத்தி வந்த கச்சேரிகளில் முதன்மை பாடகர் எஸ்.பி.பி. தான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி. இருவரும் இணைந்து 80-களில் நடத்திய இசை ராஜாங்கம் இன்றளவும் பேசப்படுகின்றன.

பாடல் உரிமம் விவகாரத்தில் எஸ்.பி.பி., இளையராஜா இருவருக்கும் கருத்துவேறுபாடு வந்தபோதும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மதிப்பை குறைத்து கொண்டதில்லை. சில மாதங்களிலேயே கசப்பு மறந்து அந்த இசைக்கூட்டணி மீண்டும் மலர்ந்தது.



இதனிடையே எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சீக்கிரம் எழுந்து வா பாலு என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் இளையராஜா.

எஸ்.பி.பி. இன்று மரணமடைந்த நிலையில், எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு உண்டு, இந்த துக்கத்திற்கு அளவில்லை” என உருக்கமாக இளையராஜா வீடியோ வெளியிட்டார். தற்போது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்று முன் மோட்ச தீபம் ஏற்றியுள்ளார்.
Tags:    

Similar News