சினிமா
அனிருத், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தேசத்தின் குரல் மறைந்துவிட்டது - எஸ்.பி.பி. மறைவுக்கு அனிருத் இரங்கல்

Published On 2020-09-25 13:31 GMT   |   Update On 2020-09-25 13:31 GMT
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இசையமைப்பாளர் அனிருத், எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் கூறியுள்ளதாவது: ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திவிட்டு தேசத்தின் குரல் மறைந்துவிட்டது. அவர் உடனான நினைவுகள் விலைமதிப்பற்றவை, மறக்க முடியாதவை. மிஸ் யூ, லவ் யூ சார் என பதிவிட்டு உள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், அனிருத் இசையில் பேட்ட படத்தில் இடம்பெற்ற ‘மரண மாஸ்’ மற்றும் தர்பார் படத்தில் இடம்பெற்ற ‘சும்மா கிழி’ போன்ற பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News