தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலாவின் அடுத்த படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவ உள்ளார்.
பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
பதிவு: செப்டம்பர் 20, 2020 17:09
சிவகார்த்திகேயன், பாலா
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா, தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். இப்படத்தில் ஆர்கே. சுரேஷ், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்மகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வருகிற 23ம் தேதி காலை 9.30 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Related Tags :