சினிமா
விஜய்

பாக்ஸ் ஆபிஸில் விஜய் தான் டாப் - பிரபல தயாரிப்பாளர் சொல்கிறார்

Published On 2020-08-30 08:40 GMT   |   Update On 2020-08-30 08:40 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மார்க்கெட் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. தயாரிப்பாளரும்,  விநியோகஸ்தருமான  ஜி. தனஞ்ஜெயன் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் டாப் 10 படங்களின் வசூல் விவரத்தை பல முக்கிய திரைப்பட விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசி தகவலை சேகரித்து, அந்த தகவலை ஒருங்கிணைத்து டாப் 10 படங்களின் வசூல் விவரத்தை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

அந்த வரிசையில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் டாப் 10 படங்களின் வசூல் விவரம்: 

விஜய்யின் 'பிகில் ' திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.152 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து முதல் இடத்தில் உள்ளது. பிரபாஸின் 'பாகுபலி2'  கிட்டத்தட்ட ரூ.150 கோடி வசூல் செய்து 2 வது இடத்தை பிடித்துள்ளது. அஜித்குமாரின் 'விஸ்வாசம்' கிட்டத்தட்ட ரூ.140 கோடி வசூலித்து 3 வது இடத்தில் உள்ளது.



ரஜினிகாந்தின் '2 .0 ' திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.135 கோடி வசூல் செய்து 4 வது இடத்திலும் , விஜயின் 'மெர்சல் ' கிட்டத்தட்ட 130 முதல் 132 கோடி வசூல் செய்து 5 வது இடத்திலும் , ரஜினிகாந்தின் 'எந்திரன் ' கிட்டத்தட்ட 130 கோடி வசூல் செய்து 6 வது இடத்திலும், விஜயின் 'சர்கார்' கிட்டத்தட்ட 125 கோடி வசூல் செய்து 7 வது இடத்திலும் உள்ளது.

ரஜினிகாந்தின் 'பேட்ட ' கிட்டத்தட்ட 110 கோடி வசூல் செய்து 8 இடத்திலும் ,  'கபாலி ' திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூலில் 9 வது இடத்திலும் , விஜய்யின் தெறி மற்றும் சீயான் விக்ரமின் 'ஐ'  ஆகிய இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ரூ 100  கோடி வசூல் செய்து 10 வது இடத்தில் உள்ளது.

இந்த டாப் 10 படங்களில் நான்கு படங்கள் தளபதி விஜய்யின் படங்கள், மேலும் நான்கு படங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய்யை  தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங் என இந்த தகவலை தளபதி விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Tags:    

Similar News