சினிமா
சூரி

சூரி பிறந்தநாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள்

Published On 2020-08-27 20:09 IST   |   Update On 2020-08-27 20:09:00 IST
முன்னணி காமெடி நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்கள் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



 கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து  மதிய உணவு வழங்கினர். மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சனிடைசர் வழங்கப்பட்டன.

Similar News