தமன்னாவில் வீட்டில் நுழைந்த கொரோனா - முன்னணி நடிகைகள் பிரார்த்தனை
பதிவு: ஆகஸ்ட் 26, 2020 16:15
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான தமன்னா வீட்டில் நுழைந்திருக்கிறது.
தமன்னா
Advertising
Advertising
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறையவில்லை. பொதுமக்கள் மட்டுமல்லாது மருத்துவர்கள், செவிலியர்கள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சனின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்தனர். அதேபோல் தமிழில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த சிலநாட்களாகவே தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவுகள் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமன்னாவின் பெற்றோர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ளனர்.