சினிமா
ரைசா

திரில்லர் படத்தில் ரைசா வில்சன்

Published On 2020-08-25 18:16 IST   |   Update On 2020-08-25 18:16:00 IST
கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படத்தில் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ரைசா. இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது இவரது நடிப்பில் திரில்லர் படம் ஒன்று உருவாகி வருகிறது.

கார்த்திக் ராஜு இப்படத்தை இயக்குகிறார். கொரோனா அச்சுறுத்தலா இவர் இயக்கி வந்த 'சூரப்பனகை' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, 'சூர்ப்பனகை' தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக தொடங்கி முடித்தும் விட்டார்கள்.



 ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் பதிப்பில் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் 'கைதி' படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எமோசனலான த்ரில்லர் பாணியில் இந்தப் படம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் ராஜு. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. 

Similar News