சினிமா
சரண்யா பொன்வண்ணன், ஏ.பி.ராஜ்

நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை.... இயக்குனர் ஏ.பி.ராஜ் காலமானார்

Published On 2020-08-24 15:02 IST   |   Update On 2020-08-24 15:02:00 IST
நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும், பிரபல இயக்குனருமான ஏ.பி.ராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 95.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார். 

இவரது தந்தை ஆண்டனி பாஸ்கர் ராஜ் மலையாள திரையுலகில் பிரபல இயக்குனராக விளங்கினார். மலையாளத்தில் 65 படங்களை இயக்கியுள்ள அவர், தமிழில் துள்ளி ஓடும் புள்ளி மான் மற்றும் கை நிறைய காசு ஆகிய இரண்டு படங்களை இயக்கி உள்ளார். 



95 வயது ஆகும் ஆண்டனி பாஸ்கர் ராஜ் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது மகள் சரண்யா பொன்வண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News