சினிமா
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சபரிமலை கோவில்

சபரிமலை கோயிலில் எஸ்.பி.பி.க்காக நடத்தப்பட்ட சிறப்பு பூஜை

Published On 2020-08-21 07:56 GMT   |   Update On 2020-08-21 07:56 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி விரைவில் நலம்பெற வேண்டி சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் நலம்பெற வேண்டி உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று திரைப்பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி.க்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டு உள்ளது.  திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் சிலர் கோயில் முன் உள்ள கொடிமரத்தின் அருகே எஸ்.பி.பி. பாடிய சங்கராபரணம் எனும் சூப்பர் ஹிட் பாடலை வாசித்து, அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தித்தனர். இதன் பின்னர் எஸ்.பி.பி. உடல் நலம் பெற வேண்டி கோயிலில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பூஜை சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்டது. 



சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும், ஐயப்பனின் புகழைப் பரப்பும் கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் 'ஹரிவராசனம்' என்ற விருதை கேரள அரசு வழங்கி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு எஸ்.பி.பி.க்கு இந்த விருது வழங்கப்பட்டது. இளையராஜா, பி சுசீலா, கே.ஜே. ஜேசுதாஸ் உள்பட பல்வேறு இசைக் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News