சினிமா
எஸ்.பி.பி - சிம்பு

எஸ்.பி.பி. என்பது ஒரு பெயரல்ல... சிம்பு அறிக்கை

Published On 2020-08-19 13:54 GMT   |   Update On 2020-08-19 13:54 GMT
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற்று வரவேண்டும் என்று சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார். 

இந்நிலையில் நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்து வரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது.

இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர்.

இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டும் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ்.பி.பி. என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவரின் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.



லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும். நம் பாடும் நிலா எழுந்து வரவேண்டு நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ்.பி.பி. அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்...

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News