சினிமா
லோகேஷ் கனகராஜ், ரஜினி, கமல்

ரஜினி - கமல் உடனான படம் என்ன ஆனது? - லோகேஷ் கனகராஜ் விளக்கம்

Published On 2020-08-17 06:14 GMT   |   Update On 2020-08-17 06:14 GMT
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த படத்தின் நிலை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திலேயே கவனம் பெற்றார். பின்னர், இவர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இதில் நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்திருந்தார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அந்தவகையில், விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. 



இதனிடையே லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்தை இயக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ரஜினி படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது: “இப்போதைக்கு நான் இந்த படம் பற்றி எந்த தகவலையும் சொல்ல முடியாது. தயாரிப்பு நிறுவனம் தான் இந்தப்படம் பற்றிய முடிவை எடுக்க வேண்டும். ஒப்பந்தங்கள் அனைத்தும் கையெழுத்தான பிறகு அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்” என கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News