சினிமா
‘திரும்பி வாங்க எஸ்.பி.பி. சார்’ - கண்கலங்கிய குஷ்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து நடிகை குஷ்பு உருக்கமாக பேசியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் நலம் பெற வேண்டி சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை குஷ்புவும் எஸ்.பி.பி குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: “எஸ்.பி.பி சார், அன்றாட வாழ்வில் நம்முடனே இருக்கிறார். அவர் இல்லாம வாழ்க்கைய நினைத்து பார்க்க முடியல. தினமும் கடவுளை கும்பிடுவதைப்போல் அவருடைய பாடல்களை கேட்காம யாராலையும் இருக்கவே முடியாது. என்னாலையும் இருக்க முடியாது. என்னைப் பொருத்தவரை அவர் தான் கடவுள் மாதிரி இருக்காரு.
கடவுளுக்கு சமமாக அவரை நான் பார்க்கிறேன். என்னை மாதிரி, இந்த உலகத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் திரும்பி வருவார்னு காத்திட்டு இருக்காங்க. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்காரு. மருத்துவர்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கார்னு சொல்றாங்க.
#SPB My God. Wishing you a very speedy recovery.. come back hale n hearty soon. We are waiting for you. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/Jkmfb9963q
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 16, 2020
அவர் எங்களுக்காக திரும்பி வரனும், பாட்டு பாடனும், அவரை சந்தித்து நான் பேசனும். அவருடைய குரலை கேட்கணும். எஸ்.பி.பி. சார் உங்களுக்காக நாங்க காத்திட்டு இருக்கோம். திரும்பி வாங்க. உங்களை போன்ற ஒரு சிறந்த மனிதரை பார்க்கவே முடியாது. திரும்பி வாங்க சார்”. என கூறியுள்ளார்.