சினிமா
பூர்ணா

திருமணத்தை நினைத்தால் பயம் வருகிறது - நடிகை பூர்ணா

Published On 2020-07-29 15:01 IST   |   Update On 2020-07-29 15:01:00 IST
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை பூர்ணா, திருமணத்தை நினைத்தால் பயம் வருவதாக கூறி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள பூர்ணாவை சமீபத்தில் ஒரு கும்பல் திருமண சம்பந்தம் பேசி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். 

இந்த நிலையில் பூர்ணா அளித்துள்ள பேட்டி வருமாறு: “எனக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினர். இதற்காக மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது இந்த மோசடி கும்பல் எங்களை பெண்கேட்டு அணுகியது. இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். என்னை மணக்க இருந்தவரும் நானும் திருமணத்துக்கு பிறகு எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசினோம். 



அதன்பிறகு எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை மாறிவிட்டது. அந்த போலிகும்பல் எங்களிடம் அன்பாக பழகி ஏமாற்றினார்கள். அவர்களை நினைத்தாலே எனக்கு அச்சம் வருகிறது. யாரை நம்புவது என்றே தெரியவில்லை. எனவே இப்போது திருமணம் வேண்டாம் என்று பெற்றோர்களிடம் கூறிவிட்டேன். திருமணத்தை நினைத்தாலே எனக்கு பயம் வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள நடனத்தில் கவனம் செலுத்துகிறேன்.” இவ்வாறு பூர்ணா கூறினார்.

Similar News