சினிமா
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங்

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்

Published On 2020-07-26 12:28 IST   |   Update On 2020-07-26 12:28:00 IST
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களில் அவர் நடிக்கிறார். 



இந்நிலையில், ரித்திகா சிங் அடுத்ததாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். பாலாஜி குமார் இயக்கும் இப்படத்தை இன்பினிட்டி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க  உள்ளது. 

Similar News