ஷாருக்கானின் சொகுசு பங்களா பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவுக்காக அல்ல... இதற்காகத்தான் ஷாருக்கான் பங்களா பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதாம்
பதிவு: ஜூலை 22, 2020 14:53
ஷாருக்கானின் பாங்களா
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் குடும்பத்தினருடன் வசிக்கும் சொகுசு பங்களாவை பாலித்தீன் கவரால் மூடி உள்ளார். இந்த பங்களாவில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் வசிக்கின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.
ஆனால் ஷாருக்கான் கொரோனாவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் பெய்யும் அதிகமான மழையிலிருந்தும், பலத்த காற்றிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளவே வீட்டின் வெளிப்புறத்தை பிளாஸ்டிக் கவரால் மூடியிருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மழைக் காலங்களில் ஷாருக்கான் இப்படிச் செய்வதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஷாருக்கான் தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :