சினிமா
வனிதா

தொடர் பிரச்சனைகள் - வனிதா எடுத்த திடீர் முடிவு

Published On 2020-07-21 17:22 IST   |   Update On 2020-07-21 17:22:00 IST
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதில் இருந்து பிரச்சனைகள் எழுந்து வருவதால் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சித்தார். தனது சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று வனிதா கண்டித்தார். இந்த தகராறு ஓய்ந்த நிலையில் இப்போது வனிதாவுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இணைய தளத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. கஸ்தூரி வெளியிட்ட பதிவில், “லட்சுமி ராமகிருஷ்ணனை நினைக்கும்போது இதயத்தில் ரத்தம் கசிகிறது. வனிதாவின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. இணையதள துஷ்பிரயோகம் செய்கிறார்” என்றார்.

இதற்கு பதில் அளித்த வனிதா, “எனது சொந்த வாழ்க்கையில் தலையிட முயன்றால் உங்கள் வாழ்க்கை பற்றி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்” என்றார். இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி, “எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டும்தான் உள்ளது என்பதை வனிதா உணர வேண்டும். எனது சொந்த வாழ்க்கையை பேசுவதில் பயனில்லை. உங்களைப்போல் சீசன் 1.2.3 போன்ற மெகா சீரியல் வாழ்க்கை எனக்கு இல்லை. நீங்கள் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர். உங்களை பிரபலபடுத்த என்னை பயன்படுத்த வேண்டாம்”என்றார். இதையடுத்து வனிதா, “எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து கஸ்தூரியை பிளாக் செய்கிறேன். காமெடி பீஸ்” என்றார். பயந்துட்டியா குமாரு என்று கஸ்தூரி பதில் கொடுத்தார். இவர்கள் மோதல் வலைத்தளத்தில் பரபரப்பானது.



இந்நிலையில், தற்போது வனிதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது, டுவிட்டரில் இருந்து அவர் திடீரென விலகியுள்ளார். வனிதாவின் டுவிட்டர் பக்கம் தற்போது காலியாக உள்ளது. வனிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை.

Similar News