சினிமா
அருள்நிதி, வெற்றிமாறன்

அருள்நிதியின் ‘டைரி’யை வெளியிட்ட வெற்றிமாறன்

Published On 2020-07-21 15:09 IST   |   Update On 2020-07-21 15:09:00 IST
அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படத்தின் தலைப்பை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.
கே 13 படத்தை தொடர்ந்து அருள்நிதி, பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில்  படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். யோகான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.



இன்று அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை  இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்திற்கு டைரி என பெயரிட்டுள்ளனர். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து டைரி படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. கொரோனா லாக்டவுன் முடிந்ததும் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News