தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் அருண்விஜய், அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் ஹரியுடன் இணையும் அருண் விஜய்?
பதிவு: ஜூலை 21, 2020 12:36
ஹரி, அருண் விஜய்
நடிகர் விஜயகுமாரின் மகனான அருண்குமார்,1995-ல் `முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், முன்னணி நாயகனாக முடியாமல் போராடி வந்தார். இதையடுத்து தனது பெயரை அருண் விஜய் என்று மாற்றிக் கொண்டார்.
அதன்பிறகு அவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அமைந்தன. குறிப்பாக, அஜித்குமாரின் `என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்த பின், அவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது. தொடர்ந்து அவர் நடித்த `தடம்,' `குற்றம் 23,' `செக்கச் சிவந்த வானம்' ஆகிய படங்களின் வெற்றிகள், அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.
தற்போது அவர் கைவசம் அக்னி சிறகுகள், சினம், பாக்ஸர் போன்ற படங்களும், மிஷ்கின் மற்றும் அறிவழகன் ஆகியோரது பெயரிடப்படாத படம் என பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி, சூர்யாவின் அருவா படத்தை இயக்குவதாக இருந்தது. கொரோனா ஊரடங்குக்கு பின் சூர்யா, வெற்றிமாறன் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதால், அந்த இடைவெளியில் அருண் விஜய் படத்தை எடுத்து முடிக்க ஹரி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
Related Tags :