சினிமா
ஜேசன் சஞ்சய், விஜய்

ஒரு வழியாக நாடு திரும்பிய மகன்.... உற்சாகத்தில் விஜய்

Published On 2020-07-21 11:47 IST   |   Update On 2020-07-21 11:47:00 IST
கனடாவில் பிலிம் மேக்கிங் படித்துவந்த நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒருவழியாக நாடு திரும்பி உள்ளார்.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் பிலிம் மேக்கிங் படித்து வந்தார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டதால், தாயகம் திரும்ப முடியாமல் சஞ்சய் கனடாவிலேயே சிக்கி  தவித்தார். மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் குடும்பமே மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய், ஒரு வழியாக நாடு திரும்பிவிட்டார். விமானம் மூலம் சென்னைக்கு வந்த சஞ்சய், நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின்னர் நேற்று முன்தினம் தன் பெற்றோரை பார்க்கச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மகன் நாடு திரும்பியதால் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் உற்சாகம் அடைத்துள்ளனர்.

Similar News