சினிமா
விஜய்

பாலிவுட், டோலிவுட் பிரபலங்களை ஓரங்கட்டி இந்திய அளவில் முதலிடம் பிடித்த விஜய்

Published On 2020-07-20 15:03 IST   |   Update On 2020-07-20 15:03:00 IST
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், பாலிவுட், டோலிவுட் பிரபலங்களை ஓரங்கட்டி முதலிடம் பிடித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 19-ந் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டது. சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் மக்கள் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சிகள் மற்றும் ஓடிடி தளங்களை பார்த்து வந்தனர். இதனால் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. 

இதன் காரணமாக அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் மக்களை கவர்வதற்காக முன்னணி நடிகர்களின் ஹிட்டான படங்களை ஒளிபரப்பி வந்தன. அந்த வகையில் இந்த ஊரடங்கு சமயத்தில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களில், அதிக பார்வையாளர்களை பெற்ற இந்திய நட்சத்திரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.



அதில் 117.9 மில்லியன் பார்வையாளர்களுடன் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். 76.2 மில்லியன் பார்வையாளர்களுடன் லாரன்ஸ் 2-ம் இடமும், 65.8 மில்லியன் பார்வையாளர்களுடன் ரஜினி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்த விவரங்கள் அனைத்தும் ஊரடங்கு போடப்பட்ட 13 வது வாரம் முதல் 27 வது வாரம் வரையிலான விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News