சினிமா
சூர்யா - கேக் வெட்டும் மக்கள்

தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள்... அவர்களுடன் கேக் வெட்டி உற்சாகம்

Published On 2020-07-19 13:48 GMT   |   Update On 2020-07-19 13:48 GMT
வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள், அவர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.

இதில்  வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில், பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் லாக்டவுனில் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த 100 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு  சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்த நண்பர்கள் தலைமையில் தினமும் உணவளித்து வருகிறார்கள். 100  நாட்களில் இதுவரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.



 இந்நிலையில் 100வது நாள் என்பதால் தெருவில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுடன் இணைந்து கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளனர். சூர்யா ரசிகர்களின் இந்த நற்செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Tags:    

Similar News