சினிமா
விக்ரம்

விக்ரமின் ‘மகாவீர் கர்ணா’ கைவிடப்பட்டதா? - படக்குழு விளக்கம்

Published On 2020-07-19 08:39 GMT   |   Update On 2020-07-19 08:39 GMT
ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடித்து வந்த ‘மகாவீர் கர்ணா’ திரைப்படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் படம் ‘மகாவீர் கர்ணா’. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

கடந்தாண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் விக்ரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடிக்க சென்றதால், ‘மகாவீர் கர்ணா’  கிடப்பில் போடப்பட்டது.  இதனிடையே இப்படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல், சமீபத்தில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ‘மகாவீர் கர்ணா’ படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி வந்தது.



ஆனால் இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விக்ரம் கைவசம் உள்ள படங்களை நிறைவு செய்தபின் தொடங்கும். இப்படம் கைவிடப்படவில்லை எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News