சினிமா
சுதீப்

ரியல் ஹீரோ என நிரூபித்த சுதீப்.... நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்தார்

Published On 2020-07-16 08:38 GMT   |   Update On 2020-07-16 08:38 GMT
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான சுதீப், நான்கு அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். இவர் ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். தமிழில் விஜய்யுடன் புலி படத்தில் நடித்திருந்தார். இதேபோல் பாலிவுட்டிலும் தபாங் படத்தில்  சல்மான் கானுக்கு வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் சுதீப் கர்நாடகாவின் சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தருவதோடு, ஆசிரியர்களின் சம்பளச் செலவுகளையும் சுதீப் ஏற்றுள்ளாராம். 



டிஜிட்டல் வழி கல்விக்காக அந்த அரசுப் பள்ளிகளில் சுதீப், கணினிகளை நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பள்ளியின் வசதிகளைத் தொடர்ந்து கண்காணிக்க, ஒரு தன்னார்வலர் குழுவை  சுதீப் நியமித்துள்ளாராம். சுதீப்பின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Tags:    

Similar News