சினிமா
நெப்போலியன், அஜித்

அஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன்

Published On 2020-07-03 14:15 IST   |   Update On 2020-07-03 14:15:00 IST
அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக நடிகர் நெப்போலியன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நண்பர்களால் ‘’மாவீரன்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர், நெப்போலியன். நடிகர், தொழில் அதிபர் என இவருக்கு இரண்டு முகங்கள். மகனின் உடல் நலன் கருதி அமெரிக்காவில் குடியேறி விட்டார். அங்கே சென்ற பிறகும் அவர் திரையுலகை மறக்கவில்லை. ‘டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்து இருக்கிறார்.

அந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் நெப்போலியன் வீடியோ காலில் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அத்தகைய ஒரு பேட்டியில்  விஜய் உடன் உள்ள பிரச்சனை பற்றி பேசி இருந்தார். போக்கிரி படத்தின் போது விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதன்பின் விஜய்யுடன் பேசுவதில்லை, அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை எனக்கூறினார்.



இந்நிலையில், அஜித் பற்றி நெப்போலியன் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அவர் கூறியதாவது: தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களுடன் நடித்து விட்டேன், அஜித் உடன் தான் இன்னும் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனா, வில்லனாக மட்டும் நடிக்க மாட்டேன். பாசிட்டிவான கதாபாத்திரம் கொடுத்தால் அவருடன் நடிக்க தயார்" என நெப்போலியன் கூறியுள்ளார்.

Similar News