சினிமா
சகுந்தலா தேவி தோற்றத்தில் வித்யாபாலன்

சகுந்தலா தேவி வாழ்க்கை வரலாறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2020-07-02 22:25 IST   |   Update On 2020-07-02 22:25:00 IST
வித்யாபாலன் நடிப்பில் உருவாக்கியிருக்கும் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்களைப் பெருக்கி விடை கூறுவதில் இயந்திரத்தைவிட மின்னல் வேகத்தில் கூறும் திறன் கொண்டவர் சகுந்தலா. எண்களின் கனமூலத்தைச் சொல்வதில் பலமுறை கணினியைத் தோற்கடித்துள்ளார்.

 கணக்கு புலி, மனித கணிப்பொறி என்று சிறப்புப் பெயர் கொண்டு குறிப்பிடப்படும் சகுந்தலா தேவியின் பயோபிக் படத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார்.

  சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் புரொடக்ஷன் மற்றும் விக்ரம் மல்ஹோத்ராவால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை அனு மேனன் இயக்கியுள்ளார். 

 இப்படம் ஜூலை 31 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

Similar News