சினிமா
முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த போஸ் வெங்கட்
நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் முதலமைச்சருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் முதலமைச்சருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாக தாக்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகமாக பகிரப்படுகிறது. இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்படக்கூடாது? இதற்கு காவல் துறையே ஒரு தனிக்குழு அமைத்து நடந்த சம்பவங்களை முறையாக விசாரித்து தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். காவல் துறையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியள்ளார்.