சினிமா
யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகாவின் திடீர் முடிவு

Published On 2020-06-19 21:42 IST   |   Update On 2020-06-19 21:42:00 IST
நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவரான யாஷிகா ஆனந்த் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
 தமிழ் சினிமாவில்  இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபல மானவர் யாஷிகா ஆனந்த். மேலும் பிக்பாஸ் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராக அவர் கலந்து கொண்டு தமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர்.

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை கொண்டு அவருக்கு அதிகளவில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே கமிட்டானார். 

இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

Similar News