சினிமா
நடிகை அஞ்சலி நாயர்

மகளை தொட முடியாமல் தவிக்கும் நடிகை

Published On 2020-06-13 12:31 IST   |   Update On 2020-06-13 12:31:00 IST
தனிமைப்படுத்தப்பட்டதால் தன் மகளை தொட முடியாமல் தவிப்பதாக பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று விட்டு கேரளா திரும்பிய மலையாள நடிகர் பிருத்விராஜை 14 நாட்கள் தனிமைப்படுத்தினர். தற்போது தனிமைப்படுத்தல் முடிந்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி மனைவி, குழந்தையை சந்தித்தார். இதுபோல் வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய நடிகை அஞ்சலி நாயரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இவர் தமிழில் நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

தற்போது டிஜிபூட்டி என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புக்காக அஞ்சலி நாயர் உள்பட 70 பேர் கொண்ட படக்குழுவினர் ஆப்பிரிக்கா சென்று இருந்தனர். கொரோனா ஊரடங்கினால் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். தற்போது சிறப்பு விமானம் மூலம் அவர்கள் கேரளா அழைத்து வரப்பட்டனர். அஞ்சலி நாயர் உள்பட அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 



இதுகுறித்து அஞ்சலி நாயர் கூறும்போது, ‘’ஊர் திரும்ப முடியாமல் 2 மாதங்கள் வெளிநாட்டில் தவித்தேன், இப்போது ஊருக்கு வந்த பிறகும் எனது மகளை தொட முடியாமலும் கட்டிப்பிடிக்க முடியாமலும் தவிக்கிறேன். மூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன்“ என்றார்.

Similar News