சினிமா
ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா

‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் எப்போது? - ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

Published On 2020-06-04 07:14 GMT   |   Update On 2020-06-04 07:14 GMT
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அவருடன் ஊர்வசி, மவுலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே நிறைவடைந்தது. படத்தை மே 1-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.



இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் தணிந்து உலகம் எப்போது பாதுகாப்பானதாக மாறுகிறதோ, மக்கள் அனைவரும் பயமின்றி எப்போ குடும்பத்தோடு திரையரங்குக்கு வருகிறார்களோ அப்போது தான் மூக்குத்தி அம்மன் ரிலீசாகும். இதை நானும் தயாரிப்பாளரும் பேசி முடிவு பண்ணிட்டோம்" என கூறினார்.
Tags:    

Similar News