பிரேமம் படத்தை இயக்கி பிரபலமான அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்தில் அருண்விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரேமம் இயக்குனருடன் இணையும் அருண்விஜய்
பதிவு: மே 31, 2020 13:09
அல்போன்ஸ் புத்திரன், அருண்விஜய்
தமிழில் நிவின் பாலி - நஸ்ரியா நஷீம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் புத்திரன், அடுத்ததாக மலையாளத்தில் இயக்கிய ‘பிரேமம்’ படத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனரானார். ‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
பிரேமம் படத்திற்கு பின் காளிதாஸ் ஜெயராமை வைத்து படம் இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், அப்படத்தை பாதியிலேயே கிடப்பில் போட்டுள்ளார். இந்நிலையில், தனது அடுத்த படத்தை தமிழில் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் மம்முட்டி மற்றும் அருண்விஜய்யை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு லாக்டவுனுக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :