சினிமா
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

பிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்

Published On 2020-05-26 14:18 GMT   |   Update On 2020-05-26 14:18 GMT
தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையை தேவி ஸ்ரீ பிரசாத் பாட வைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  4 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ஆல்பத்தில் பிரபல நடிகை ஸ்ரதா தாசை பாடவும் ஆடவும் வைத்துள்ளார்.



ஸ்ரதா தாஸ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

இதுகுறித்து தேவிஸ்ரீ பிரசாத் கூறியபோது, ‘இந்த பாடலின் ரிஹர்சலின்போதும், ஒரிஜினலை படமாக்கும்போது தான் எந்தவித வித்தியாசத்தையும் பார்க்கவில்லை என்றும் அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக ஸ்ரதா தாஸ் பாடி நடனமாடியுள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த பாடலை தனது மியூசிக் குருவான தந்தை சத்தியமூர்த்தி அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும், அவருடைய பிறந்த நாள் பரிசாக இதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News