சினிமா
போனி கபூர்

போனி கபூரை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் வீட்டில் கொரோனா பரிசோதனை

Published On 2020-05-26 18:21 IST   |   Update On 2020-05-26 18:21:00 IST
தயாரிப்பாளர் போனி கபூரை தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற தமிழ் படம் மற்றும் பல பாலிவுட் திரைப்படங்களை தயாரித்தவர் போனிகபூர். இவருடைய வீட்டில் பணிபுரிந்த ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து போனி கபூர் மற்றும் அவரது இரண்டு மகள்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மும்பை சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். 



இந்த நிலையில் பாலிவுட்டின் மற்றொரு பிரபல தயாரிப்பாளரான கரன் ஜோஹர் வீட்டில் பணிபுரிந்த இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரண்ஜோஹர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், அனைவருக்கும் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்த போதிலும் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதார ஊழியர்கள் அறிவுரை கூறியதாகவும், கரண்ஜோஹர் தனது சமூக வலை பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News