சினிமா
சுராஜ்

கைதியால் வந்த வினை... தனிமையில் இருக்க மலையாள நடிகருக்கு அதிகாரிகள் உத்தரவு

Published On 2020-05-26 14:35 IST   |   Update On 2020-05-26 14:35:00 IST
மலையாளத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஒருவரை தனிமையில் இருக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவனந்தபுரத்தை அடுத்த வெஞ்ஞாரமூட்டில் கள்ளச்சாராய வழக்கில் ஒரு வாலிபரை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையே அந்த கைதிக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த இன்ஸ்பெக்டர், போலீசார் உள்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.



இதற்கிடையே இன்ஸ்பெக்டர், மலையாள நடிகர் சுராஜ், எம்.எல்.ஏ. முரளி ஆகியோருடன் ஒரு விழாவில் பங்கேற்றுள்ளது தெரியவந்தது. பின்னர், நடிகர் சுராஜ், எம்.எல்.ஏவையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சுராஜ் 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News