சினிமா
அனுஷ்கா, கவுதம் மேனன், திரிஷா

மீண்டும் கவுதம் மேனனுக்காக இணையும் திரிஷா, அனுஷ்கா?

Published On 2020-05-24 11:32 IST   |   Update On 2020-05-24 11:32:00 IST
என்னை அறிந்தால் படத்தில் இணைந்து நடித்திருந்த திரிஷாவும், அனுஷ்காவும், தற்போது மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
காதல் படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா இவரின் மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் பேசப்படுகிறது. அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அதன் ஒரு பகுதியை கார்த்திக் டயல் செய்த எண் என்ற பெயரில் குறும்படமாக எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சிம்புவை வைத்து வேறு ஒரு காதல் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடிக்க உள்ளதாகவும், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 



இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிஷாவும், அனுஷ்காவும் ஏற்கனவே கவுதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Similar News