சினிமா
நடிகர் விஷால்

மீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்

Published On 2020-05-23 16:10 IST   |   Update On 2020-05-23 16:10:00 IST
நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட இருக்கிறது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. அதையடுத்து சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது.

தற்போது, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும். இதுதொடர்பான அறிக்கையை அக்டோபர் 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் போட்டியிட அறிவிப்புகள் ஏற்கனவே வந்தது. விஷால் தலைமையிலான அணி எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்தது.

இந்நிலையில், கடந்தமுறை தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நம்ம அணியாக வெற்றி பெற்றதை தொடந்து இப்போது நடக்கவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் அதே அணி சார்ந்தவர்களுடன் களம் இறங்க விஷால் அணி முடிவு எடுத்துள்ளார்கள்.

Similar News